சென்னையில் 3 கடைகளில் 1500 பொம்மைகள் பறிமுதல்: ஐஎஸ்ஐ முத்திரை இல்லாததால் நடவடிக்கை

சென்னை: ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத காரணத்தால் சென்னையில் 3 கடைகளில் விற்பனைக்கு வைத்து இருந்த 1500 பொம்மைககளை பிஐஎஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தளர்.

இந்திய தர நிர்ணய அமைவன சட்டம் 2016 பிரிவு 28 இன் படி கடைகளில் பிஐஎஸ் ஸ்டாண்டர்ட் மார்க் (ஐஎஸ்ஐ மார்க்) இல்லாத பொம்மைகளை விற்பனை செய்யக் கூடாது. அப்படி விற்பனை செய்பவர்களுக்கு BIS சட்டம், 2016 பிரிவு 29 இன் படி, இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. 2 லட்சத்திற்கு குறையாத அபராதம் விதிக்கப்படும். அல்லது பொருட்களின் மதிப்பில் பத்து மடங்கு வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இதன்படி சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ஹேம்லேஸ், ராயப்பேட்டை, எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் உள்ள ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் லிமிடெட் ஆகிய இடங்களில் அமலாக்க சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது, ​​இந்திய தர நிர்ணய அமைவன சட்டம் 2016 பிரிவு 28 இன் படி, கடைகளில் பிஐஎஸ் ஸ்டாண்டர்ட் மார்க் (ஐஎஸ்ஐ மார்க்) இல்லாமல் பொம்மைகள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்படி பிஐஎஸ் ஸ்டாண்டர்ட் மார்க் (ஐஎஸ்ஐ மார்க்) இல்லாத மொத்தம் 1466 (496 எலக்ட்ரிக்கல் மற்றும் 970 எலக்ட்ரிக்கல் அல்லாத பொம்மைகள் (அதாவது மென்மையான பொம்மைகள், லெகோஸ், மோல்டிங் களிமண், ரிமோட் கண்ட்ரோல் பொம்மைகள் என இரண்டும்) பறிமுதல் செய்யப்பட்டன. இதுபோன்று ஓ.எம் .ஆர் (OMR) சாலையில் உள்ள நார்த் ஸ்டார் நிறுவனங்களில் (FIRST CRY) நடந்த சோதனையில் மொத்தம் 48 பொம்மைகள் (47 மின்சாரம் அல்லாத பொம்மைகள் மற்றும் 1 எலக்ட்ரிக் பொம்மை) பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், பொது மக்கள் பிஐஎஸ் தொடர்பான புகார்களை, பிஐஎஸ் தெற்கு மண்டல அலுவலகம், சிஐடி வளாகம், 4வது குறுக்கு சாலை, தரமணி, சென்னை-600 113 என்ற முகவரிக்கும், BIS Care செயலியிலும், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.