தோனியிடம் இருந்து இதை கற்றுக் கொண்டேன்: இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பளீச் பதில்


கேப்டன்சி குறித்து என்னுடைய பல கேள்விகளுக்கு பதிலளித்தது மகேந்திர சிங் தோனி தான் என்று சார்ஜா வாரியர்ஸ் அணியின் தலைவர் மொயின் அலி தெரிவித்துள்ளார்.

சார்ஜா வாரியர்ஸ்

 
ஐக்கிய அரபு எமிரேட்சில் உலகளாவிய வீரர்களை உள்ளடக்கிய டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது, இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

அவற்றில் சார்ஜா வாரியர்ஸ் என்ற அணியின் கேப்டனாக இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர் மொயின் அலி செயல்பட்டு வருகிறார்.

தோனியிடம் இருந்து இதை கற்றுக் கொண்டேன்: இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பளீச் பதில் | Moeen Ali Speech About Dhoni Captainship AdviseBCCI/IPL Photo

இவர் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், தனக்கு கேப்டன்சி குறித்த சந்தேகங்களை தெளிவாக விளக்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி தான் என்று தெரிவித்துள்ளார்.


மொயின் அலி கருத்து

மொயின் அலி இது குறித்து பேசுகையில் நான் சில நேரங்களில் மகேந்திர சிங் தோனியிடன் அதிகமாக உரையாடுவேன், அப்பொழுது நான் அவரிடம் கேப்டன்சி பற்றிய நிறைய சந்தேகங்களை கேட்பேன் அவரும் எனக்கு தெளிவாக பதில் அளிப்பார்.

சிறந்த கேப்டனாக அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன், சொல்லபோனால் சென்னை அணியில் இருக்கும் போது நாம் அதிகமாகவே கற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

தோனியிடம் இருந்து இதை கற்றுக் கொண்டேன்: இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பளீச் பதில் | Moeen Ali Speech About Dhoni Captainship AdvisePTI/ CSK Instagram  

அத்துடன் சென்னை அணி எப்போதுமே குடும்ப அணி போன்றது, அதனால் எதிர்வரும் 2023 ஐபிஎல் தொடருக்காக நான் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறேன்.

மேலும் இந்த ஆண்டு ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்துள்ள புதிய வீரர்களுடன் இணைந்து விளையாட ஆவலாக உள்ளேன்,

அதிலும் சேப்பாக் மைதானத்தில் சென்னை ரசிகர்கள் மத்தியில் விளையாடுவதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.