புதுக்கோட்டை: வடமலாப்பூரில் விதிகளை மீறி ஜல்லிக்கட்டு காளைகளை ஏற்றி வந்த 15 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி ஒன்றுக்கு மேற்பட்ட காளைகளை ஏற்றி சரக்கு வாகனங்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. திருவரங்குளம் அருகே பேருந்து மோதி வேனில் இருந்த 3 காளைகள் உயிரிழந்ததையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
