Budget 2023: பட்ஜெட்டில் நுகர்வு செலவினங்களுக்கான வரி தள்ளுபடி பலன்கள் எவ்வளவு?

Budget Expectations: பட்ஜெட்டில் நுகர்வு செலவினங்களுக்கான வரி தள்ளுபடி பலன்களை அதிகரிக்க வேண்டும் என்று தொழில்துறை அமைப்பான PHDCCI, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது, பொருளாதாரத்தில் மக்களின் வாங்கும் சக்தியை ஊக்குவிக்கும் வகையில், நுகர்வு செலவினங்களுக்கான வரி தள்ளுபடி சலுகைகளை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது,” என்று  தொழில்துறை அமைப்பு பரிந்துரைத்துள்ளது, இது, எதிர்வரவிருக்கும் யூனியன் பட்ஜெட் 2023-24 இல், நுகர்வுச் செலவினங்களுக்கான வரி தள்ளுபடி பலன்கள் அதிகரிக்கும் என்றும், வணிகம் செய்வதற்கான செலவு குறையும் என்றும் நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.

“இந்த நேரத்தில், பொருளாதாரத்தில் நுகர்வு அதிகரிக்க, நுகர்வு செலவினங்களுக்கான வரி தள்ளுபடி சலுகைகளை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது,” என்ற பரிந்துரையை நிதியமைச்சர் பரிசீலிப்பார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் வாங்குதல், கார் வாங்குதல் போன்ற நுகர்வுச் செலவினங்கள் தொடர்பான வரித் தள்ளுபடி, தற்போது ரூ.2 லட்சமாக இருக்கிறது. குடியிருக்க வாங்கும் வீட்டிற்கான வரிச் சலுகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என்று PHDCCI வலியுறுத்தியது. அதேபோல, இந்த பட்ஜெட்டில், வரிச் சலுகை பிற வகையறாக்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும்.

“நுகர்வு செலவின தள்ளுபடி ஆண்டுக்கு ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும். இது பொருளாதாரத்தில் மொத்த தேவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் தனியார் முதலீடுகளை ஈர்க்கும், நிறுவனங்களின் திறன் பயன்பாட்டை அதிகரிக்கும் மற்றும் பொருளாதாரத்தில் மகத்தான வேலை வாய்ப்புகளை உருவாக்கும்,” PHD சேம்பர் ஆஃப் காமர்ஸ் மற்றும் தொழில்துறை தெரிவித்துள்ளது.

பட்ஜெட்டுக்கு முந்தைய திட்டங்களின் ஒரு பகுதியாக, மூலதனம், மின்சாரம், தளவாடங்கள், நிலம் மற்றும் உழைப்பு செலவுகள் உள்ளிட்ட வணிகச் செலவைக் குறைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தொழில்துறை அமைப்பான PHDCCI பரிந்துரைத்தது.

நிதிக்கான அணுகல் என்பது, தற்போது MSME கள் எதிர்கொள்ளும் ஒரு பெரிய தடையாக உள்ளது என்று கூறும் PHDCCI, தற்போதைய வங்கி விதிமுறைகளை சுட்டிக்காட்டுகிறது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கோரப்படும் கடன்களுக்கு, அதிக அளவிலான முதன்மை பாதுகாப்பு மற்றும் பிணையத்தை வங்கிகள் கோருகின்றன.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (MSME ) மேம்படுத்தப்பட்ட பணப்புழக்கத்தைப் பொறுத்து, வணிகங்களுக்கான மலிவு வட்டி விகிதத்தில் கடன்களை சிரமமின்றி வழங்குவதில் அரசாங்கத்தின் கவனம் இருக்க வேண்டும் என்று PHDCCI பரிந்துரைத்தது.

எதிர்வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.