ஈரோடு: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசியல் கட்சி போஸ்டர்கள் அகற்றப்பட்டு வருவதுடன், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் செய்யும் பணியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த 04ம் தேதி காலமானார். திருமகன் ஈவேராவின் மறைவால் ஈரோட் கிழக்கு சட்டமன்ற தொகுதி தற்போது காலியாகியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறையின் படி, காலியிடம் ஏற்பட்ட சட்டமன்ற தொகுதி […]
