உக்ரைன் போர் துவங்கியதிலிருந்தே ரஷ்ய ஜனாதிபதி புடின் அணுகுண்டு வீசிவிடுவேன் என பயமுறுத்திக்கொண்டே இருக்கிறார்.
இன்னொருபக்கம், புடினுக்கு புற்றுநோய், அதனால் அவர் தான் சாகும்போதே மற்றவர்களையும் தன்னுடன் அழைத்துச்சென்றுவிடவேண்டும் என்பதற்காக அணுகுண்டை பிரயோகிக்கலாம் என்னும் ரீதியில் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
Image: BBC
அணுகுண்டு வீசினால் வீட்டில் எங்கு சென்று மறைந்துகொள்ளவேண்டும்?
அணுகுண்டு வெடிக்கும்போது அதிலிருந்து வரும் அதிவேக காற்று, ஒரு கட்டிடத்தின் திறப்புகள் வழியாகத்தான் உள்ளே நுழையும். அதாவது, ஜன்னல்கள் வழியாக.
அத்துடன், குண்டு வெடிப்பதால் ஏற்படும் அதிர்வு சுவர்கள் போன்ற தடுப்புகள் மீதுதான் நேரடியாக மோதுமாம், கட்டிடங்களில் மூலைகளில் பாதிப்பு குறைவாக இருக்குமாம்.
ஆகவே, தொலைவில் எங்காவது அணுகுண்டு வெடித்தால், உடனே வீட்டிற்குள் சென்று மறைந்துகொள்ளவேண்டும். ஜன்னல்களின் அருகில் நின்றுகொண்டிருந்தால், அங்கிருந்து விலகி ஜன்னல் இல்லாத அறைகள், அல்லது கட்டிடங்களின் மூலையில் சென்று பதுங்கிக்கொள்ளவேண்டும் என்கிறார், சைப்ரஸ் தீவிலுள்ள Nicosia பல்கலைப் பேராசிரியரான Dimitris Drikakis என்பவர்.
Image: Getty Images