எகிப்து அதிபர் 24-ல் இந்தியா வருகை: குடியரசு தின விழாவில் பங்கேற்கிறார்| Egypt President visits India on 24th: Participates in Republic Day celebrations

புதுடில்லி : ‘குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வரும் 24-ம் தேதி எகிப்து நாட்டு அதிபர் இந்தியா வருகிறார். அவருடன் 180 பேர் கொண்ட குழுவினர் வருகின்றனர்.

இது வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது, வரும் ஜனவரி 26ல் கொண்டாடப்படும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும்படி எகிப்து அதிபர் அப்தெல் பட்டா அல் சிசிக்கு அழைப்பு விடுத்து, பிரதமர் மோடி கடிதம் எழுதினார்.

அந்தக் கடிதத்தை ஏற்றுக் கொண்ட எகிப்து அதிபர் அப்தெல் பட்டா அல் சிசி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து அல்தெல்லை அல் சிசி தலைமையில் 180 பேர் கொண்ட குழுவினரும் இந்தியா வருகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.