பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துவிடுங்கள், இல்லை என்றால் புல்டோசர் தயாராக இருக்கிறது என்று மத்தியப்பிரதேச மாநிலத்தில் அமைச்சர் ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அம்மாநிலத்தில் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளன.
இந்நிலையில், தேர்தல் குறித்து ஆளும் பாஜகவை சேர்ந்த அமைச்சர் மகேந்திர சிங் சிசோடியா பேசிய வீடியோ கிளப்பியுள்ளது. குணா மாவட்டத்தில் ருதியாய் என்ற பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசினார்.
அப்போது அவர் காங்கிரஸ் கட்சி தொண்டர்களை மிரட்டும் தொனியில் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனைவரும் பாஜகவில் சேர்ந்துவிடுங்கள், இல்லை என்றால், புல்டோசர் தயாராக இருக்கிறது என்று அச்சுறுத்தும் வகையில் பேசியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் மகேந்திர சிங் சிசோடியா ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in