Varisu: தமிழகத்தில் மட்டும் ரூ. 150 கோடியை நெருங்கும் வாரிசு: அடுச்சுவுடுங்கனு கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

Thalapathy Vijay: விஜய்யின் வாரிசு படம் தமிழகத்தில் மட்டும் ரூ. 150 கோடி வசூலை நெருங்குவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

வாரிசுவம்சி பைடிபல்லி இயக்கத்தில் தளபதி விஜய், ரஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, ஷாம் , சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 11ம் தேதி வெளியான வாரிசு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. வாரிசு படம் ரிலீஸான 5 நாட்களில் உலக அளவில் ரூ. 150 கோடியும், 7 நாட்களில் ரூ. 210 கோடியும் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் வசூல் குறித்து மேலும் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழ்நாடுவாரிசு படம் தமிழகத்தில் மட்டும் ரூ. 150 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வார நாட்களில் கூட வாரிசு நல்ல வசூல் செய்து வருகிறது. இந்தியா மட்டும் அல்லாமல் வெளிநாடுகளிலும் வாரிசு, வாரசுடு படங்களை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். இந்நிலையில் தான் வசூல் விபரம் குறித்து தயாரிப்பு நிறுவனம் அவ்வப்போது அப்படேட் கொடுத்து வருகிறது.

பொய்அடேங்கப்பா, வாரிசு படம் ரிலீஸான ஒரு வாரத்திலேயே ரூ. 210 கோடியா என பலரும் வியந்தார்கள். அதே சமயம் அதற்கு ஆதாரம் இருக்கிறதா என்றும் சினிமா ரசிக்ரகள் கேட்டார்கள். இந்நிலையில் படத்தின் வசூல் முழுமையாக தெரிய இன்னும் சில நாட்கள் ஆகும். அப்படி இருக்கும்போது வாரிசு படம் ரூ. 210 கோடி வசூலித்திருப்பது 200 சதவீதம் வாய்ப்பில்லாத ஒன்று என விநியோகஸ்தர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

Varisu: ப்ளூ சட்டை மாறன் சொல்வதை பார்த்தால் ரூ. 210 கோடி வசூல் கப்சாவா?

தில் ராஜுவாரிசு பட வசூல் குறித்து திருப்பூர் சுப்ரமணியன் கூறியிருப்பது பற்றி நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் தில் ராஜு என தயாரிப்பாளரிடம் சமூக வலைதளவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். வசூல் விபரம் முழுவதுமாக தெரியும் முன்பே ரூ. 210 கோடி என்று அடித்துவிட்டீர்களா?. நீங்கள் உங்க பாட்டுக்கு அடுச்சுவிட்டால் அதை நம்பி விஜய்ணா வீட்டுக்கு அல்லவா ரெய்டு போவார்கள். கடைசியில் சிக்குவது தளபதி தான். வசூலை கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்கள் தில் ராஜு என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்.

துணிவுஇந்த பொங்கலுக்கு வாரிசு படத்துடன் சேர்ந்து வந்த அஜித் குமாரின் துணிவு படத்தின் வசூல் குறித்து எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்து வருகிறார் போனி கபூர். திருப்பூர் சுப்ரமணியன் சொன்னதை கேட்டவர்களோ, போனிஜி செய்வது தான் சரி. அவர் காரணம் இல்லாமல் அமைதியாக இருக்கவில்லை என்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.