ஆடுகளத்தில் நுழைந்து ரோஹித் ஷர்மாவை கட்டியணைத்த இளம் ரசிகன்!


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவை பாதுகாப்பது தடைகளை மீறி மைதானத்திற்குள் நுழைந்து கட்டியணைத்த சிறுவனின் வீடியோ வைரலாகிவருகியது.

ரோஹித் ஷர்மாவை கட்டியணைத்த இளம் ரசிகன்

ராய்ப்பூரில் இன்று ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டியின்போது, கேப்டன் ரோஹித் ஷர்மாவை கட்டிப்பிடிக்க இளம் ரசிகர் ஒருவர் ஆடுகளத்திற்குள் நுழைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

தனக்கு மிகவும் பிடித்த வீரரை சந்திக்க சிறுவன் எடுத்த தைரியமான ஓட்டம் அவனது கனவை நிறைவேற்றியது.

ஆடுகளத்தில் நுழைந்து ரோஹித் ஷர்மாவை கட்டியணைத்த இளம் ரசிகன்! | Young Fan Invades Pitch Hug Rohit Sharma ViralGetty Images

பாதுகாப்புப் பணியாளர்கள் சிறுவனை மைதானத்திலிருந்து வெளியேற்றுவதில் துரிதமாகச் செயல்பட்டனர். இருப்பினும், அந்த ரசிகருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று ரோஹித் பாதுகாப்பு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மட்டும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து வைரலாகிவருகின்றன.

தொடரை கைப்பற்றிய இந்தியா

இன்றைய ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 34.3 ஓவர்களில் 108 ஓட்டங்களில் ஆல் அவுட் ஆனது.

இந்திய அணி 20.1 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 111 ஓட்டங்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.