இந்திய விமானத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்… தரையிறக்கப்பட்டது எங்கு தெரியுமா?

Flight Bomb Threat: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து சுமார் 240 பயணிகளுடன் கோவா நோக்கிச் சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மிரட்டலை தொடர்ந்து, இன்று அதிகாலை விமானம் உஸ்பெகிஸ்தானுக்கு திருப்பிவிடப்பட்டது. 

அசூர் ஏர் நிறுவனத்தால் இயக்கப்படும் விமானம் (AZV2463)இந்திய வான்வெளிக்குள் நுழைவதற்கு முன்பு திருப்பிவிடப்பட்டது. தெற்கு கோவாவில் உள்ள டபோலிம் விமான நிலையத்தில் அதிகாலை 4.15 மணிக்கு விமானம் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது.

“விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்ட டபோலிம் விமான நிலைய இயக்குநருக்கு நள்ளிரவு 12.30 மணிக்கு மின்னஞ்சல் வந்ததை அடுத்து விமானம் திசைதிருப்பப்பட்டது” என்று அந்த அதிகாரி கூறினார். 

ரஷ்யாவின் பெர்ம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கோவாவுக்குச் சென்ற அசூர் ஏர் விமானத்திற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் உஸ்பெகிஸ்தானுக்கு திருப்பி விடப்பட்டது. 2 கைக்குழந்தைகள் மற்றும் 7 பணியாளர்கள் உட்பட மொத்தம் 238 பயணிகள் விமானத்தில் இருப்பதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக, இரண்டு வாரத்திற்கு முன்பு, இதேபோன்ற வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து மாஸ்கோவில் இருந்து கோவாவுக்குச் சென்ற விமானம் குஜராத்தின் ஜாம்நகர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டிருந்தது. தற்போது, மீண்டும் அதே விமானத்திற்கு மிரட்டல் விடப்பட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.