சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் யார்? என்பது குறித்து நாளை மீண்டும் ஆலோசனை என தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். நாளை நடைபெறும் ஆலோசனைக்கு பிறகு வேட்பாளர் பெயர் கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் வேட்பாளர் பெயரை நாளை அனுப்பி வைத்த பிறகு கட்சி தலைமை முடிவு செய்யும் எனவும் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற ஆலோசனைக்கு பின் தினேஷ் குண்டுராவ் பேட்டி பேட்டியளித்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு தினேஷ் குண்டுராவ் நன்றி தெரிவித்தார்.
