ஈரோடு கிழக்கு: முதல் ஆளாக களமிறங்கிய திமுக – வேட்பாளரா முக்கியம் சாதனைகளை பாருங்க!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வேட்பாளர் யார் என இன்னும் அறிவிக்கப்படவில்லை. மறைந்த சட்டமன்ற உறுப்பினரின் சகோதரும், ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனுமான சஞ்சய் சம்பத் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

வேட்பாளர் அறிக்கப்படாத நிலையிலும் திமுக அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி ஆகியோர் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். ஒன்றரை ஆண்டு கால திமுக அரசின் சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிக்கிறோம் என்று அமைச்சர்
கே.என்.நேரு
தெரிவித்தார்.

பிரச்சாரத்தின் போது செய்தியாளர்களர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு,” ஏற்கெனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்கு தொகுதியை முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளார். தேர்தல் பணிகளை செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரிவித்துள்ளார். தோழமை கட்சியின் வெற்றிக்கு அமைச்சர் முத்துசாமி தலைமையில் தேர்தல் பணியாற்ற வந்து உள்ளோம். அமைச்சர் முத்துசாமி சொல்லும் பணியை செய்ய வந்துள்ளோம். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற முழுமையாக உழைப்போம். இந்த ஆட்சியின் ஓன்றரை ஆண்டு கால சாதனைகளை கூறி வாக்கு சேகரிப்போம்” என்று கூறினார்.

அதிமுக கூட்டணியில் அதிமுகவே போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பும், ஓ.பன்னீர் செல்வம் தரப்பும் வேட்பாளரை நிறுத்துவோம் என்று கூறிவருகின்றனர். கூட்டணிக் கட்சியினர்களை தனிப்பட்ட முறையில் இரு தரப்பும் சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர்.

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாமக இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை, தங்கள் கட்சியும் போட்டியிடுவதில்லை என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக ஓபிஎஸ், இபிஎஸ் இருவரில் யாருக்கு ஆதரவு அளிக்கப் போகிறது என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.