சென்னை: தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதால் சென்னை மெட்ரோ ரயில் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று (ஜன.21) காலை சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை 6 நிமிட இடைவெளியிலும், சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை நிலையம் வரை 6 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும் சென்னை சென்ட்ரல் – விமான நிலையம் வரையிலான சேவை மட்டும் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டுவிட்டதாகவும், மெட்ரோ ரயில் வழக்கம்போல் இயங்கும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.