24 நாட்களாக நடுக்கடலில் தனியாக சிக்கித்தவித்த நபர்., தக்காளி சாஸ் குடித்து உயிர் பிழைத்த அதிசயம்


கரீபியன் கடலில் நடுவே தனியாக படகில் மாட்டிக்கொண்ட ஒருவர் 24 நாட்களாக வெறும் கெட்ச்அப் மற்றும் சிறிது நூடுல்ஸ் உண்டு உயிர் பிழைத்து மீண்டு வந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை அளிக்கிறது.

24 நாட்களாக நடுக்கடலில் தனியாக தத்தளித்த நபர்

டொமினிகா நாட்டைச் சேர்ந்த எல்விஸ் ஃபிராங்கோயிஸ் (Elvis Francois) என்ற 47 வயது நபர், கொலம்பியாவின் புவேர்ட்டோ பொலிவாருக்கு வடமேற்கே 120 மைல் தொலைவில் அவரது பாய்மரப் படகில் கடற்கரைக்கு திருமண முடியாமல் தனியாக மாட்டிக்கொண்டார்.

அவரது படகில் மேலோட்டத்தில் “உதவி” என்ற வார்த்தை பொறிக்கப்பட்டிருந்ததை விமானம் ஒன்று பார்த்த பிறகு, ஃபிராங்கோயிஸ் அங்கு சிக்கிக்கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக, கொலம்பிய கடற்படை செவ்வாயன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

24 நாட்களாக நடுக்கடலில் தனியாக சிக்கித்தவித்த நபர்., தக்காளி சாஸ் குடித்து உயிர் பிழைத்த அதிசயம் | Man Lost At Sea Survives Ketchup 24 DaysTwitter @UltimaHoraCR

கொலம்பிய இராணுவம் வெளியிட்ட ஒரு வீடியோவில், பிராங்கோயிஸ் பேசுகையில், “என்னிடம் உணவு இல்லை. படகில் இருந்த கெட்ச்அப் பாட்டில், பூண்டு தூள் மற்றும் மேகி (ஸ்டாக் க்யூப்ஸ்) மட்டுமே இருந்தன. அதனால் நான் அவற்றை சிறிது தண்ணீரில் கலக்கி உண்டுவந்தேன்” என்று கூறினார்.

மீட்கப்பட்ட பிராங்கோயிஸ் கார்டஜீனாவுக்கு மாற்றப்பட்டார், அங்கு அவர் மருத்துவ சிகிச்சை பெற்றார், பின்னர் அவர் வீடு திரும்புவதற்காக குடிவரவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று கொலம்பிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிராங்கோயிஸ் தீவு நாடான டொமினிகாவில் இருந்து வருகிறார், அங்கு டிசம்பர் மாதம் செயிண்ட் மார்ட்டின் தீவின் டச்சு பகுதிக்கு அருகில் தனது படகை சரிசெய்து கொண்டிருந்தபோது, ​​மோசமான வானிலை காரணமாக அவரது படகை கடலுக்குள் இழுத்துச் சென்றது.

24 நாட்களாக நடுக்கடலில் தனியாக சிக்கித்தவித்த நபர்., தக்காளி சாஸ் குடித்து உயிர் பிழைத்த அதிசயம் | Man Lost At Sea Survives Ketchup 24 DaysTwitter @UltimaHoraCR 

“இருபத்தி நான்கு நாட்கள் – நிலம் இல்லை, பேச யாரும் இல்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை, எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை. அது கடினமாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில், நான் எல்லா நம்பிக்கையையும் இழந்துவிட்டேன். நான் எனது குடும்பத்தைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன்” என்று கூறினார்.

அவருக்கு கரையை நோக்கி படகை செலுத்தும் அறிவைப் பெறவில்லை என்றும், கடலில் தொலைந்து போன நாட்களில் தனது படகை மீண்டும் கரைக்கு கொண்டு செல்ல முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
  Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.