ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் தமிழகத்தின் பாலாஜி-ஜீவன் ஜோடி வெற்றி

மெல்போர்ன்,

கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதன் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீராம் பாலாஜி-ஜீவன் நெடுஞ்செழியன் இணை இவான் டோடிச் (போஸ்னியா)-ஆஸ்டின் கிராஜிசெக் (அமெரிக்கா) உடன் மோதியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்ரீராம் பாலாஜி-ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி 7-6 (8-6), 2-6, 6-4 என்ற செட் கணக்கில் இவான் டோடிச்-ஆஸ்டின் கிராஜிசெக் ஜோடியை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.