ஓட்டுங்க வண்டிய அடிச்சு ஓட்டுங்க குடை சாய்ந்த சரக்கு வண்டி..! மஞ்சு விரட்டுன்னா அப்படித்தான் இருக்குமாம்..!

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு படைபரிவாரங்களுடன் குட்டி சரக்கு வாகனத்தின் மீது ஏறி கும்பலாக அமர்ந்து அலப்பறை கொடுத்த காளையர்களால் வண்டி குடை சாய்ந்த வீடியோ வெளியாகி உள்ளது.

சிவகங்கை அருகே மஞ்சுவிரட்டு பார்ப்பதற்கு சரக்கு வாகனத்தின் கூரையில் அமர்ந்து அலப்பறை கொடுத்துக் கொண்டே பயணித்த காளை நேசர்களால் அந்த வண்டி குடை சாய்ந்து கவிழ்ந்த வீடியோ வைரலாகி வருகின்றது.

மஞ்சு விரட்டு நிகழ்ச்சிக்கு வண்டியை ஓட்டிச்சென்ற ஓட்டுனரை பாடாய் படுத்திய இளம் காளையர்களின் தொல்லையால் வண்டி குண்டு குழிகளை தாண்டிச்சென்று திரும்பிய வேகத்தில் அப்படியே கவிழ்ந்தது.

கவிழ்ந்த சில வினாடிகளில் அந்த வண்டியை அலேக்காக தூக்கி நிறுத்தி தங்களை காளையர்கள் என்று நிரூபித்தனர்.வண்டி குடை சாய்ந்த பரிதாப காட்சிகள் நகைச்சுவையாக பகிரப்பட்டு வருகின்றது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.