ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த போது 7வது மாடியில் இருந்து விழுந்து மாணவி பலி

ஐதராபாத்: ஜதராபாத் விடுதியின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த பட்டதாரி மாணவி ஒருவர், 7வது மாடியில் இருந்து கீழே விழுந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் செயல்படும் ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் பல்கலைக்கழகத்தில், அரியானா மாநிலம் பஹம்னோலி கிராமத்தை சேர்ந்த அஞ்சலி (22) என்பவர் எம்ஏ ஆங்கிலம் படித்து வந்தார். எம்பிசி விடுதியில் தங்கி படித்த அவர், விடுதியின் நான்காவது மாடியில்  உள்ள படிக்கட்டின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்தார்.

எதிர்பாராதவிதமாக ஜன்னலின் ஓரத்தில் இருந்து தவறி உயரமான மாடியில் இருந்து கீழே விழுந்தார். சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். தகவலறிந்த போலீசார் அஞ்சலியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘மரணமடைந்த அஞ்சலியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிராபாத விபத்து நடந்துள்ளது; அவர் தற்கொலை செய்து கொள்வில்ைல என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது’ என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.