உயர்தரப் பரீட்சை எழுதும் மரண தண்டனை கைதி


இன்று ஆரம்பமாகியுள்ள உயர்தரப் பரீட்சைக்கு சிறைக்கைதிகள் சிலர் தோற்றவுள்ளனர். 

இதன்படி, மரண தண்டனை பெற்ற கைதி ஒருவர் இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுதவுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த கைதி சிறைவாசத்தின் போது “அனுஷய ஆசவ” என்ற நாவலையும் எழுதியுள்ளார்.

பரீட்சைக்குத் தோற்றும் சிறைக்கைதிகள்

உயர்தரப் பரீட்சை எழுதும் மரண தண்டனை கைதி | A Death Row Inmate Who Wrote The Exam

இவருடன் வெலிக்கடை சிறையில் உள்ள நால்வர் 2022/23 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எழுதவுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவரும் இவ்வருடம் உயர்தரப் பரீட்சை எழுதுகின்றார். Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.