ஐதராபாத் மத்திய பல்கலை. வளாகத்தில் பி.பி.சி. ஆவணப்படம் காண்பிக்கப்பட்டதாக புகார்| Hyderabad Central University. BBC in campus Complaints about documentary being shown

புதுடில்லி : பிரதமர் மோடி குறித்து, பி.பி.சி., தயாரித்துள்ள ஆவணப்படம் ஐதராபாத் மத்திய பல்கலை. வளாகத்திற்குள் காண்பிக்கப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

பிரிட்டனை சேர்ந்த செய்தி நிறுவனமான, பி.பி.சி., ‘இந்தியா: மோடிக்கான கேள்விகள்’ என்ற தலைப்பில், இரண்டு பாகங்களாக ஆவணப்படத்தை தயாரித்துள்ளது.

இதில், 2002ல் குஜராத்தில் நடந்த கலவரத்துடன், அப்போது அங்கு முதல்வராக இருந்த மோடியை தொடர்பு படுத்தியுள்ளனர். இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஐதராபாத்தில் மத்திய பல்கலை. வளாகத்தில் நேற்று இரவு பி.பி.சி., ஆவணப்படம் காண்பிக்கப்பட்டதாகவும், அங்குள்ள சில மாணவர்கள் அமைப்புகள் இதற்கான ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக பல்கலை. நிர்வாகத்திடமிருந்து எழுத்து பூர்வ புகார் மனு பெறப்பட்டு விசாரணை துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.