குருவாயூர் கோவிலுக்கு சொந்தமாக 260 கிலோ தங்கம்| Guruvayur temple owns 260 kg of gold

திருச்சூர் : கேரளாவில் உள்ள பிரசித்திபெற்ற குருவாயூர் கோவிலுக்கு சொந்தமாக, ௨௬௦ கிலோ தங்கம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ளது குருவாயூர் கிருஷ்ணர் கோவில். பாதுகாப்பு காரணங்களுக்காக கோவிலின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படாமல் இருந்தது.

தகவல் அறியும் உரிமை சட்டம் மேல்முறையீட்டு வழக்கில், கோவில் சொத்துக்கள் குறித்த தகவல்களை வெளியிட உத்தரவிடப்பட்டது. இதன்படி கோவிலுக்கு, ௧,௭௦௦ கோடி ரூபாய் வங்கி முதலீடுகள் இருப்பதாக சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்துள்ள பதிலில், கோவிலுக்கு சொந்தமாக, ௨60 கிலோ தங்கம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, ௬,௬௦௫ கிலோ வெள்ளியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.