சபாநாயகர் மீது மேலூர் எம்.எல்.ஏ., பரபரப்பு குற்றச்சாட்டு!

சட்டமன்றத்தில், சபாநாயகர் எந்த கேள்வியும் கேட்க அனுமதிப்பதில்லை, கோரிக்கை குறித்த கேள்விகளுக்கும் அமைச்சர்கள் முறையாக பதில் அளிப்பதில்லை என மேலூர் சட்டமன்ற உறுப்பினர் குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூர் செக்கடி பஜார் பகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106 ஆவது பிறந்நநாள் பொதுக்கூட்டம் அதிமுக திருப்பரங்குன்றம் தொகுதி எம்,எல்.ஏவும் மதுரை கிழக்கு மாவட்ட செயலாளருமான வி.வி ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்றது. இதில் மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப செயலாளர் ராஜ்சத்யன்,மேலூர் எம்.எல்.ஏ பெரியபுள்ளான் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றிருந்தனர்.

இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியாபுள்ளான் என்ற செல்வம் பேசுகையில், “தமிழக சட்டமன்றத்தில், எதிர்கட்சி உள்ளிட்ட எந்த சட்டமன்ற உறுப்பினர்களையும், சபாநாயகர் முழுமையாக பேசவிடாமல் மைக்கை ஆப் செய்து விடுகின்றார். மேலும் கோரிக்கைகள் குறித்த கேள்விகளுக்கும், அமைச்சர் உள்ளிட்டவர்கள் முறையாக பதில் அளிப்பதில்லை.” என குற்றம் சாட்டினர்.

இதனைத் தொடர்ந்து பேசிய மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப செயலாளர் ராஜ்சத்யன், “தமிழகத்தில் ஆளும், தரப்பினர் மீது போதை கடத்தல், மணல் கொள்ளை, அராஜகம் உள்ளிட்ட பல்வேறு குற்ற சாட்டுகள் உள்ளது. அதற்கு ஆதாரமாக தமிழகத்தில் உள்ள முக்கிய பத்திரிக்கையும் கட்டுரை வெளியிட்டு வருகின்றது. இதற்காகவே ஆளும்
திமுக
அரசு விரைவில் வீட்டிற்கு அனுப்பபடும்.” என்றார்.

ராஜன்செல்லப்பா பேசுகையில், “ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் அங்கு மாவட்ட செயலாளர் கூட நியமிக்க முடியாத ஒபிஎஸ் அணியினர் போட்டியிட்டால் அதிமுக தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களின் எதிர்ப்பை மட்டுமே சம்பாதிப்பர். திமுகவை வீழ்த்த வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். அதற்கு சரியான கருவி அதிமுகவும் எடப்பாடி பழனிசாமியும் மட்டும்தான். அதற்கு இடையூறு வகிப்பவர்களை மக்கள் தவறாக நினைப்பார்கள். கையெழுத்து போடவும் சமாதாமாக போவேன் என கூறிவந்த ஒபிஎஸ் என்றைக்காவது அதிமுகவை தலைமையேற்பேன் என்றோ முதலைச்சராவேன் என்றோ சொல்லியிருக்காரா? அவர் தகுதி இல்லாத நபர். தேர்தலில் யார் போட்டியிட்டாலும் அதிமுக மட்டுமே வெற்றிபெறும்.” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.