மும்பை: நடிகரின் தாயை தாக்கியதாக மனைவி மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்குக்கும் ஆலியாவுக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது. சில மாதங்களுக்கு முன் நவாசுதீன் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், தன்னை ஏமாற்றி மோசடி செய்ததாகவும் போலீஸில் ஆலியா புகார் அளித்திருந்தார். இந்நிலையில், ஆலியா தன்னுடைய வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தன்னை தாக்கியதாக நவாசுதீனின் தாயாரான மெகருதீன் சித்திக் மும்பை போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் இதுகுறித்து ஆலியாவிடம் விசாரித்து வருகின்றனர்.
