பிரான்சிலிருந்து ஆசையாக உறவினர்களை காண வந்த குடும்பம்.. கோர விபத்தில் குழந்தையுடன் ஒருவர் பலி..மேலும் சிலர் கவலைக்கிடம்

புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் சங்கர்(56), சுஜாதா(62), சுகுந்தன்(38). இவர்கள் மூவரும் பிரான்ஸில் இருந்து வந்த தங்கள் உறவினர்களை அழைத்து வர சென்னை விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

பிரான்ஸ் உறவினர்கள் 

புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் சங்கர்(56), சுஜாதா(62), சுகுந்தன்(38). இவர்கள் மூவரும் பிரான்ஸில் இருந்து வந்த தங்கள் உறவினர்களை அழைத்து வர சென்னை விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

பிரான்ஸ் உறவினர்களுடன்

டெம்போ வேனில் அவர்கள் பயணித்துள்ளனர். பிரான்ஸில் இருந்து வந்த சுரேஷ்(60), தமிழரசி(59), விக்னேஸ்வரன்(35), அலுயன்(36) அவரது மனைவி வினோதினி(35) மற்றும் ஒன்றரை வயது மகள் விநாலி ஆகியோர் அந்த வேனில் அழைத்து வரப்பட்டனர்.

அவர்கள் சென்ற வாகனம் விழுப்புரம் மாவட்டம் கீழ்கூத்தபாக்கம் அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தாறுமாறாக ஓடிய அந்த வாகனம், சாலையோரத்தில் இருந்த இரும்பு தடுப்புக்கட்டையில் பயங்கரமாக மோதியது.

பிரான்சிலிருந்து ஆசையாக உறவினர்களை காண வந்த குடும்பம்.. கோர விபத்தில் குழந்தையுடன் ஒருவர் பலி..மேலும் சிலர் கவலைக்கிடம் | Two Death Tamilnadu Whose Are Coming From France

இதனால் அந்த இரும்பு கம்பி வாகனத்தின் முன்பகுதியில் சொருகி பின்பக்கமாக வெளியே வந்தது. இந்த விபத்தில் சிக்கியவர்களில் சுரேஷ், குழந்தை விநாலி ஆகிய இருவரும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

3 பேர் கவலைக்கிடம்

மேலும் படுகாயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சுரேஷின் மனைவி தமிழரசி உட்பட 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உறவினர்களை காண வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் விபத்தில் சிக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

பிரான்சிலிருந்து ஆசையாக உறவினர்களை காண வந்த குடும்பம்.. கோர விபத்தில் குழந்தையுடன் ஒருவர் பலி..மேலும் சிலர் கவலைக்கிடம் | Two Death Tamilnadu Whose Are Coming From France

   Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.