பிரித்தானியாவின் குட்டி நகரம்… லொட்டரியில் பெருந்தொகை பரிசை அள்ளிய 435 பேர்: பணத்தை என்ன செய்தார்கள்?


பிரித்தானியாவின் குட்டி நகரமான ரைம்னியில் கடந்த ஆண்டு Postcode லொட்டரி எனப்படும் மக்கள் பரிசு சீட்டில் மொத்தமாக 435 பேர் பரிசை அள்ள, அந்த தொகையை அவர்கள் என்ன செய்தார்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தலா 185,000 பவுண்டுகள்

மொத்தம் 8,000 மக்கள் தொகை கொண்ட அந்த குட்டி நகரத்தில் இரண்டு மதுபான விடுதிகளும் மூன்று சிற்றுண்டி கடைகளும் மட்டுமே அங்குள்ள மக்களின் பொழுதுபோக்கு.
இந்த நகர மக்களில் 435 பேர்கள் தான் கடந்த மே மாதம் லொட்டரியில் மொத்தமாக பரிசை அள்ளியவர்கள்.

பிரித்தானியாவின் குட்டி நகரம்... லொட்டரியில் பெருந்தொகை பரிசை அள்ளிய 435 பேர்: பணத்தை என்ன செய்தார்கள்? | Tiny Brit Town Different People Different People

@WalesOnline

இதில் 9 பேர்களுக்கு தலா 185,000 பவுண்டுகள் பரிசாக கிடைத்தது. ஓய்வு பெற்ற இரும்பாலை ஊழியர் ஒருவர் இரண்டு சீட்டுகளில் மொத்தம் 370,000 பவுண்டுகளை அள்ளினார்.
அந்த தொகையில் Jaguar ஒன்றை சொந்தமாக்க முடிவு செய்துள்ளதுடன், நீண்ட நாள் ஆசையான கடற்பயணத்திற்கும் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரது மனைவி புற்றுநோயால் காலமாக, நொறுங்கிப் போனவர் தமது மொத்த ஆசைகளையும் விட்டுவிட்டார்.
முன்னாள் நிலக்கரி வியாபாரியான டேவிட் பிரைஸ் என்பவர் 185,000 பவுண்டுகளை அள்ளியிருந்தார்.
ஆனால், பரிசு கைக்கு வந்த மூன்று மாதங்களில் இதய நோயால் அவர் மரணமடைந்தார்.

பிரித்தானியாவின் குட்டி நகரம்... லொட்டரியில் பெருந்தொகை பரிசை அள்ளிய 435 பேர்: பணத்தை என்ன செய்தார்கள்? | Tiny Brit Town Different People Different People

Image: John Myers

குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும்

மட்டுமின்றி, பரிசு தொகை கைக்கும் வந்ததும், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் குறிப்பிட்ட தொகையை பகிர்ந்து கொண்டுள்ளார்.
90 வயதான பெற்றி 3,894 பவுண்டுகளை பரிசாக பெற்றிருந்தார். அப்போதைய சூழலில் அந்த தொகை தமக்கு பெரும் உதவியாக இருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜேனட் மற்றும் ரே ஜென்கின்ஸ் தம்பதி 185,000 பவுண்டுகளை வென்றிருந்தது. ஆனால் ரே பக்கவாதத்தால் பாதித்திருந்த நிலையில், சக்கர நாற்காலி ஒன்றை வாங்கும் ஆசையை நிறைவேற்றினார்.

பிரித்தானியாவின் குட்டி நகரம்... லொட்டரியில் பெருந்தொகை பரிசை அள்ளிய 435 பேர்: பணத்தை என்ன செய்தார்கள்? | Tiny Brit Town Different People Different People

Image: Channel 4/Handout

ரைம்னி நகரில் ஒரே நாளில் 435 பேர்கள் பெருந்தொகையை பரிசாக அள்ளிய சம்பவத்தை தனியார் ஊடகம் ஒன்று ஆவணப்படமாக தயாரித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி 28ம் திகதி உள்ளூர் நேரப்படி மதியத்திற்கு மேல் 6.05 மணிக்கு ஒளிபரப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.