பிரித்தானியாவில் கொள்ளை மற்றும் கொலை வழக்கில் பெண் கைது: விசாரணை தீவிரம்


பிரித்தானியாவில் ஸ்ட்ராட்ஃபோர்ட் சாலையில் 60 வயதுடைய நபர் விழுந்து கிடந்து பிறகு உயிரிழந்த நிலையில், பெண் ஒருவர் கொள்ளை மற்றும் கொலை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை மற்றும் கொள்ளை சம்பவம்

பிரித்தானியாவின் ஸ்ட்ரோடில் ஸ்ட்ராட்ஃபோர்ட் சாலையில்(Stratford Road) உள்ள டெஸ்கோ சூப்பர் ஸ்டோர் கார் பார்க்கிங்கில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் 60 வயதுடைய நபர் விழுந்து கிடந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

பாதிக்கப்பட்டவரின் மொபிலிட்டி ஸ்கூட்டரைக் கொள்ளையடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட பிறகு, அவர் மர்மமான முறையில் உயிரிழந்ததை தொடர்ந்து Stroud ஐச் சேர்ந்த பெண் ஒருவரை குளோசெஸ்டர்ஷைர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிரித்தானியாவில் கொள்ளை மற்றும் கொலை வழக்கில் பெண் கைது: விசாரணை தீவிரம் | Uk Woman Arrested On Suspicion Of Murder Robbery

பாதிக்கப்பட்டவர் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட போது அவரது கருப்பு மொபிலிட்டி ஸ்கூட்டர் அங்கு இல்லை. மேலும் பாதிக்கப்பட்டவர் குளோசெஸ்டர்ஷைர் ராயல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் அன்றைய தினமே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

மொபிலிட்டி ஸ்கூட்டர் கண்டுபிடிப்பு

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு முன்னதாக பிஸ்லி பழைய சாலையில் கைவிடப்பட்ட நிலையில், மொபிலிட்டி ஸ்கூட்டர் பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

பிரித்தானியாவில் கொள்ளை மற்றும் கொலை வழக்கில் பெண் கைது: விசாரணை தீவிரம் | Uk Woman Arrested On Suspicion Of Murder Robbery

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஸ்ட்ரோட்டின் பாகன்ஹில் பகுதியில் யாரோ ஒருவரால் முன்பக்கத்தில் கூடையுடன் கூடிய மொபிலிட்டி ஸ்கூட்டரை கொண்டு செல்லப்படுவதை பார்த்து இருந்தால் அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்த ஆர்வமாக உள்ளனர். Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.