வேலுர்: திமுக ஆட்சி பதவி ஏற்ற பிறகு இதுவரை கோவில்களுக்கு சொந்தமான ரூ.3,943 கோடி சொத்துக்கள் மீட்கப்பட்ட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலம் மங்களலட்சுமி சமேத அழகுராஜப் பெருமாள் கோவிலில் புணரமைப்பு பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மங்களலட்சுமி சமேத அழகுராஜப் பெருமாள் ரூ.7 கோடி செலவில் புணரமைக்கப்படும் என்றவர்,. இந்த கோவில் 1,100 ஆண்டுகளுக்கு முன்பு சோழர்களால் கட்டப்பட்டது. இந்த கோவில் தொன்மை மாறாமல் […]
