அரசுப் பணியில் நிரந்தர ஊழியராக ஆவதற்காக 5 மாத பெண் குழந்தையை கால்வாயில் வீசியெறிந்த தம்பதி: ராஜஸ்தானில் பயங்கரம்

பிகானேர்: ராஜஸ்தான் அரசுப் பணியில் நிரந்தர ஊழியராக ஆவதற்காக, தங்களது 5 மாத பெண் குழந்தை தடையாக இருந்ததால், அந்த குழந்தையை தம்பதியினர் கால்வாயில் வீசியெறிந்து கொன்றனர். ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் பகுதியை சேர்ந்த ஜவர்லால் மேக்வால் (36) என்பவர், ஒப்பந்த ஊழியராக அரசுப் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 5 மாதங்களுக்கு முன் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது.

ராஜஸ்தான் அரசு விதிமுறைகளின்படி, இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசுப் பணியில் வழங்க முடியாது என்பதாலும், ஒப்பந்த ஊழியராக உள்ள தான் நிரந்தர ஊழியராக முடியாது என்பதாலும், மூன்றாவதாக பிறந்த குழந்தையை கொலை செய்ய திட்டமிட்டார். அதையடுத்து தனது மனைவியுடன் சேர்ந்து, மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தையை, கால்வாயில் வீசிக் ெகான்றார். இதுகுறித்து பிகானேர் போலீஸ் எஸ்பி யோகேஷ் யாதவ் கூறுகையில், ‘போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கால்வாயில் கிடந்த குழந்தையின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினோம்.

அரசுப் பணியில் ஒப்பந்த ஊழியாராக பணியாற்றிய ஜவர்லால் மேக்வாலுக்கு, பணி  நிரந்தரம் ஆவதற்கு தனது பெண் குழந்தை தடையாக இருந்ததால் அந்த குழந்தையை கொன்று கால்வாயில் வீசியுள்ளனர். கைது செய்யப்பட்ட தம்பதிகள் ஜவர்லால் மேக்வால் – கீதா தேவி ஆகிய இருவர் மீதும் ஐபிசி பிரிவுகள் 302 மற்றும் 120 பி ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.