புதுச்சேரி: ஒன்றிய அரசின் திட்டங்களை செயல்படுத்த விடாமல் புதுச்சேரி தலைமை செயலர் தடுப்பதாக சபாநாயகர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். தலைமை செயலாளர் ராஜுவ் சர்மா உள்ளிட்ட அதிகாரிகள் ஒன்றிய அரசின் திட்டங்களை தடுக்கின்றனர். அரசுக்கு ஒத்துழைக்காத அதிகாரியின் மீது பேரவையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் புதுச்சேரி சபாநாயகர் செல்வம் தெரிவித்திருக்கிறார். ஒன்றிய அரசின் திட்ட நிதிகள் சரியாக செலவிடப்படாமல் திருப்பி அனுப்ப அதிகாரிகளே காரணமாக உள்ளனர் எனவும் செல்வம் கூறியுள்ளார்.
