கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் யானைக்கு நீச்சல் குளம் – அமைச்சர் சேகர் பாபு திறந்து வைத்தார்.!

தமிழகத்தில் கோவில்கள் அதிகம் உள்ள நகரங்களில் ஒன்று கும்பகோணம். இங்குள்ள ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் 55 வயதுடைய மங்களம் என்ற பெண் யானை ஒன்று உள்ளது.

இந்த யானைக்கு கோவில் வளாகத்திலேயே நன்கொடையாளர்கள் ஏற்பாட்டில் ரூ.8 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில், கான்கீரிட் தளமும், நீச்சல் குளமும் கட்டப்பட்டு அதற்கு பாதுகாப்பிற்காக இரும்பு தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், இன்று இந்த நீச்சல் குளத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.

இவருடன், எம்.பி கல்யாணசுந்தரம், அரசு கொறடா கோவி.செழியன், எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், சாக்கோட்டை அன்பழகன், கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சு.ப.தமிழழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.