சென்னை: நடிகரும் இயக்குநருமான E.ராமதாஸ் மாரடைப்பு காரணமாக காலமானார். இயக்குனராக தமிழ் சினிமாவில் 1986 ஆம் ஆண்டு ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற படத்தில் அறிமுகமானார். ராஜா ராஜா தான், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு, இராவணன், வாழ்க ஜனநாயகம், சுயம்வரம் ஆகிய படங்களை ராமதாஸ் இயக்கி உள்ளார். எழுத்தாளராக பல படங்களில் பணிபுரிந்த ராமதாஸ் நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்தவர். வசூல் ராஜா MBBS, யுத்தம் செய், விக்ரம் வேதா, விசாரணை, தர்மதுரை, அறம், […]
