வாலிபால் அணி ஓனரான விஜய் தேவரகொண்டா

தெலுங்குத் திரையுலகத்தின் இளம் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா. அதிகமான இளம் ரசிகர்களை தன் வசம் ஈர்த்து வைத்துள்ளவர். தற்போது வாலிபால் அணிக்கு இணை ஓனராக ஆகியுள்ளார்.

பிரைம் வாலிபால் லீக் என தனியார் அமைப்பு ஒன்று இந்திய மாநகரங்களுக்கு இடையிலான வாலிபால் போட்டி ஒன்றை நடத்த உள்ளது. இதில் சென்னை, கொச்சி, கோழிக்கோடு, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, அகமதபாத், கொல்கத்தா ஆகிய எட்டு அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

இதில் ஐதராபாத் அணியான 'த பிளாக் ஹாக்ஸ்' அணியின் இணை ஓனராகவும், பிராண்ட் அம்பாசிடராகவும் பொறுப்பேற்றுள்ளார் விஜய் தேவரகொண்டா. இந்த அணியின் முதன்மை ஓனராக அபிஷேக் ரெட்டி கன்கனலா என்பவர் இருக்கிறார்.

விஜய் தேவரகொண்டா ஏற்கெனவே, 'கிங் ஆப் த ஹில் என்டர்டெயின்மென்ட்' என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் ஆஹா ஓடிடி தளத்தில் சிறிய பார்ட்னராக உள்ளார். ரவுடிவேர் என்ற பேஷன் கம்பெனிக்கும் சொந்தக்காரராக இருக்கிறார். இப்போது புதிதாக விளையாட்டுத் துறையிலும் கால் பதித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.