இந்தூர்: இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டிகளில் வென்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் இரு அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று (ஜன.,24) இந்தூரில் நடக்கிறது. இதில் ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லதாம் ‘பவுலிங்’ தேர்வு செய்தார். இந்திய அணியில் முகமது ஷமி, சிராஜ்க்கு ஓய்வளிக்கப்பட்டு, உம்ரான் மாலிக், சகால் சேர்க்கப்பட்டனர். இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் துவக்கம் தந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement