டி. இமான் இந்திய திரைப்பட இசையமைப்பாளரும் பின்னணிப் பாடகரும் ஆவார். தமிழ்த் திரைப்படங்களுக்கு பின்னணியிசையும் பாடல்களும் அமைத்துள்ளார். இவருக்கு விசில் திரைப்படத்திற்குப் பிறகு பரவலாக அறிமுகம் கிடைத்தது. இவர் சென்னை எழும்பூர் டான் பாஸ்கோ பள்ளியில் பயின்றவர். பின்னர் லயோலாக் கல்லூரியில் படித்தார். 2001 ஆம் ஆண்டு தமிழன் திரைப்படத்தில் அறிமுகமான இசையமைப்பாளர். தற்போது வரை 100 க்கும் அதிகமான படங்களில் இசையமைத்து விட்டார்.
சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது வாங்கிய 5வது தமிழ் இசையமைப்பாளர் இமான் தான். பல விருதுகளை வென்றிருந்தாலும் டொரன்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கான தூதராக இவர் நியமிக்கப்பட்டதை மிகப் பெரிய கெளரமாக கருதி வருகிறார்.
இந்த நிலையில் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தனது அற்புதமான இசையால் ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர் இசையமைப்பாளர் டி.இமான். இவர் தனது 40வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இமானின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலர் சோஷியல் மீடியாவில் வாழ்த்து பகிர்ந்து வருகின்றனர்.
டி. இமான் இசையில் சிறந்த பாடல்கள்
இந்த ஸ்பெஷல் தினத்தில் நமக்கு கிடைத்த மனதுக்கு மிக நெருக்கமான பாடல்களைப் பற்றிப் பார்க்கலாம்.
* மாட்டு.. மாட்டு – தமிழன்
* விசில் அடிக்கும் வதனா – விசில்
* அழகிய அசுரா – விசில்
* டேய் கைய வெச்சிகிட்டு சும்மா – கிரி
* தெரியாம பாத்துபுட்டேன் – திருவிளையாடல் ஆரம்பம்
* மதுரா ஜில்லா – திருவிளையாடல் ஆரம்பம்
* விழிகளில் விழிகளில் – திருவிளையாடல் ஆரம்பம்
* என்னம்மா கண்ணு – திருவிளையாடல் ஆரம்பம்
* கண்ணுக்குள் ஏத்தோ – திருவிளையாடல் ஆரம்பம்
* மொபைலா மொபைலா – ரெண்டு
* மச்ச கன்னி – நான் அவன் இல்லை
* ராதா காதல் – நான் அவன் இல்லை
* ஏன் எனக்கு மயக்கம் – நான் அவன் இல்லை
* ஓ திவ்யா ஓ திவ்யா – மாசிலாமணி
* ஓடி ஓடி விளையாட – மாசிலாமணி
* ஏய் வாடா வாடா – கச்சேரி ஆரம்பம்
* கச்சேரி கச்சேரி – கச்சேரி ஆரம்பம்
* நீயும் நானும் – மைனா
* ஜல் ஜல் ஜல் ஓசை – மனம் கொத்திப் பறவை
* போ போ போ – மனம் கொத்திப் பறவை
* டங் டங் – மனம் கொத்திப் பறவை
* ஒண்ணும் புரியல – கும்கி
* சொல்லிட்டாளே அவ காதல – கும்கி
* ஐயயோ ஆனந்தமே – கும்கி
* சோய் சோய் – கும்கி
* நீ யெப்போ புள்ள – கும்கி
* ஒவ்வொன்றாய் திருடுகிறாய் – ஜீவா
* ஒருத்தி மேலே – கும்கி
* அம்மாடி உன் அழகு – வெள்ளக்கார துரை
* தூவானம் – ரோமியோ ஜூலியட்
* டண்ட நக்கா – ரோமியோ ஜூலியட்
* அடியே அடியே இவளே – ரோமியோ ஜூலியட்
* மிருதா.. மிருதா – மிருதன்
* முன்னாள் காதலி – மிருதன்
* போன உசுரு வந்துருச்சு – தொடரி
* டமாலு டுமீலு – போகன்
* செந்தூரா – போகன்
* யெம்புட்டு இருக்குது ஆசை – சரவணன் இருக்க பயமேன்
* அம்முக்குட்டியே – ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்
* டிக் டிக் டிக் – டிக் டிக் டிக்
* குறும்பா – டிக் டிக் டிக்
* அடிச்சு தூக்கு – விஸ்வாசம்
* கண்ணான கண்ணே – விஸ்வாசம்
* உன் கூடவே பொறக்கணும் – நம்ம வீட்டு பிள்ளை
* காந்த கண்ணழகி – நம்ம வீட்டு பிள்ளை
* எங்க அண்ணன் – நம்ம வீட்டு பிள்ளை
* என் இனிய தனிமையே – டெடி
* மறந்தாயே – டெடி
* அண்ணாத்த அண்ணாத்த – அண்ணாத்த
* சும்மா சுர்ருன்னு – எதற்கும் துணிந்தவன்
* உள்ளம் உருகுதய்யா – எதற்கும் துணிந்தவன்