சிலிண்டர் வெடித்து சிறுமி, பாட்டி பலி | A girl and a grandmother were killed in a cylinder explosion

சங்கரெட்டி தெலுங்கானாவில், வீட்டில் இருந்த ‘காஸ்’ சிலிண்டர் வெடித்து சிதறியதில், 6 வயது சிறுமி, அவரது பாட்டி பலியாகினர்.

தெலுங்கானாவின் மேடக் மாவட்டத்தில் உள்ள சிவனுார் கிராமத்தில், ஒரு வீட்டில் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. விசாரணையில், வீட்டிலிருந்த காஸ் சிலிண்டர் வெடித்ததில், இந்த விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.

இதில் வீட்டின் ஒரு பகுதி தீக்கிரையானது. அப்போது, வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி மற்றும் அவரது பாட்டி உடல் கருகி பலியாகினர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.