பூமியின் மையப்பகுதி தலைகீழாக சுற்றத்தொடங்கியுள்ளது! நமக்கெல்லாம் என்ன நடக்கும்?

நமக்கு பூமியின் மேல் பகுதியில் என்ன நடக்கிறது என்பது மட்டுமே தெரியும். ஆனால் பூமிக்கு உள்ளே ஒரு தனி உலகம் இருப்பது தெரியுமா? இதனை கடந்த 1935 ஆம் ஆண்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இதற்கு பெயர் Core அதாவது மையப்பகுதி என்று பெயர் வைத்தனர். இதுகுறித்து பல கற்பனையான Journey to the center of the earth போன்ற ஹாலிவுட் திரைப்படங்களும் வெளியாகின.

நம்முடைய பூமியில் ஏற்படும் இயற்கை பேரிடர்களுக்கும் இந்த Core பகுதிக்கும் பெரும் சம்பந்தம் உள்ளது என்றால் பலர் நம்பமாட்டார்கள். குறிப்பாக எரிமலை வெடிப்புகள், நிலநடுக்கம் போன்றவை ஏற்படுவது இந்த Core பகுதி காரணமாகவே ஆகும்.

NASA விஞ்ஞானிகள் இதுபற்றி கண்டிபிடிக்கும்போது பூமியை மூன்றாக பிரித்தார்கள். முதல் பகுதியான நாம் வாழும் பகுதி Crust என்றும் இரண்டாவது Mantle என்றும் மூன்றாவது மையப்பகுதி Core என்றும் அழைக்கிறார்கள்.

இந்த Core பகுதி தற்போது பூமியின் சுற்றுப்பாதைக்கு நேர் எதிராக சுற்றுவதாக கண்டுபிடித்துள்ளனர். இது 35 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறும் என்றும் கடைசியாக 1970 ஆம் ஆண்டு இவ்வாறு நடந்ததாகவும் கூறுகிறார்கள். மீண்டும் இந்த Core மாற்றம் 2040களின் மத்தியில் நடக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

இதனால் என்ன நடக்கும்?

இந்த Core பகுதி சுமார் 5000 கிலோமீட்டர் அகலம் கொண்டது. இதை சுற்றி திரவ வடிவில் இரும்பு உள்ளது. இந்த பகுதி மற்ற பகுதிகளான Mantle மற்றும் Crust பகுதிகளை விட 1 டிகிரி கூடுதல் வேகத்தில் சுற்றும்.

இந்த மாற்றம் காரணமாக இனி நமது தினசரி நாட்களின் நேரம் சிறிதளவு மாறலாம். இதனால் மனிதர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை பற்றி இன்னும் யாரும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் இதன் பிறகு இதுகுறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு புதிய ஆராய்ச்சிகள் தொடங்கும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.