
இறுதிக்கட்டத்தை நோக்கி சூர்யா 42வது படம்
சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 42வது படத்தின் படப்பிடிப்பு எண்ணூர் துறைமுகத்தில் தொடங்கி சென்னையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு தயாராகி வருகிறது. 10 மொழிகளில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தில் சூர்யா ஐந்து விதமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் பீரியட் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இதற்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. அந்த வகையில் பிப்ரவரி, மார்ச் மாத இறுதிக்குள் சூர்யா 42வது படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்து வரும் இந்த படம் இதுவரை சூர்யா நடித்த படங்களில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வருகிறது.