சென்னையில் மின்சார ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பெண் உயிரிழந்த நிலையில், இளைஞர் சிகிச்சை பெற்று வருகிறார்.
பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த இளம் பெண்ணும், இளைஞரும் திடீரென தாம்பரம் செல்லும் மின்சார ரயில் முன் குதித்தனர். அதில் இளம்பெண் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
பலத்த காயம் அடைந்த இளைஞர் சிகிச்சைக்காக ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரும் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
இளைஞர் கீழ் கட்டளை பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் என்பதும், இவர் தனியார் கல்லூரியில் படித்து வருவதும் தெரிய வந்தது. உயிரிழந்த பெண்ணின் முகம் சிதைத்துள்ளதால் அவரை கண்டுப்பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் போலீஸார் அவரின் அடையாளங்களை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் காதல் பிரச்னை காரணமாக இருவரும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in