மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு என்னும் இடத்தில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இங்கு சந்திரசேகரன் என்ற ஆசிரியர் பள்ளி நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் மாணவிகளை அடித்ததாக கூறி எழுந்த புகாரில் அவரை பள்ளியை விட்டு நிர்வாகம் நீக்கியது.
இதனையடுத்து ஆசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்ட தகவல் அறிந்தவுடன், அப்பள்ளியில் பயிலக்கூடிய 11 ,12 ஆம் வகுப்பு படிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பள்ளி வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட துவங்கினர். அப்போது பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும், ஆசிரியரை மீண்டும் பணியமர்த்த வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அறிந்து பள்ளி வளாகத்திற்கு வருகை தந்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட கல்வி அலுவலர் மீண்டும் சந்திரசேகரனை பணியமர்த்த உத்தரவிட்டார்.