பிக் பாஸ் சீசன் 6 கடந்த ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா, விக்ரமன், ஆயிஷா, அமுதவாணன், பாடகர் ஏடிகே, மைனா நந்தினி, ஜி.பி.முத்து உள்ளிட்ட 21 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
ஒவ்வொருவராக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற ஆறு பேர் இறுதிச் சுற்றுக்கு டிக்கெட் பெற்றனர். அதில், பணப்பெட்டி டாஸ்க்கில் கதிரவன் 3 லட்ச ரூபாய் எடுத்துக்கொண்டு வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து 11.75 லட்சத்தை எடுத்துக் கொண்டு அமுதவாணன் வெளியேறினார். பிக் பாஸ் சீசனின் முதல்முறையாக மிட் வீக் எவிக்சன் நடத்தப்பட்டு அதில் மைனா நந்தினி வெளியேற்றப்பட்டார்.
கடைசியாக விக்ரமன், அசீம், சிவின் ஆகிய மூவர் மட்டும் பிக்பாஸ் வீட்டில் இருந்தனர். இந்நிலையில் கடந்த ஞாயிறு மாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் அதிக வாக்குகளை வாங்கி அசீம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனென்றால் சிவின் மற்றும் விக்ரமனுக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகம் இருந்தது. அவர்கள்தான் முதல் இரண்டு இடங்களை பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அசீம் முதல் இடத்தை பிடித்தது ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் விஜய் டிவியை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில், விக்ரமனை பாராட்டி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் ட்வீட் செய்துள்ளார். அதில், விக்ரமன் டைட்டில் வின்னர் அல்ல, டோட்டல் வின்னர் என்று குறிப்பிட்டுள்ளார்.
newstm.in