Thangalaan: 'தங்கலான்' படத்திற்காக ஜிவி பிரகாஷ் செய்யும் காரியம்: வேறலெவல் அப்டேட்.!

பா. ரஞ்சித், விக்ரம் இருவரும் முதன்முறையாக ‘தங்கலான்’ படத்தில் இணைந்துள்ளனர். விக்ரம் நடிப்பில் அண்மையில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. மணிரத்னம் இயக்கிய இந்தப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரம் இந்தப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் விக்ரம் தற்போது நடித்து வரும் ‘தங்கலான்’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

விக்ரம் நடிப்பில் அண்மையில் வெளியான கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து விக்ரம் நடிக்கவுள்ள 61-வது படத்தை பா.இரஞ்சித் இயக்குகிறார். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கவுள்ளதாக கடந்தாண்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதன் படப்பிடிப்பு பூஜையுடன் அண்மையில் சென்னையில் துவங்கியது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்த பூஜையில் இயக்குனர் பா.இரஞ்சித், நடிகர்கள் விக்ரம், கலையரசன், ஆர்யா, சிவகுமார், நடன இயக்குனர் சாண்டி, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷும் இதில் கலந்துகொண்டார். இந்நிலையில் அண்மையில் இந்தப்படத்தின் ‘தங்கலான்’ டைட்டில் மற்றும் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில எக்கச்சக்க எதிர்பார்ப்பை கிளப்பி இருந்தது.

Thalapathy 67: ‘தளபதி 67’ படத்தில் சீயான் விக்ரம்.?: லோகேஷ் சொன்ன செம்ம மாஸ் தகவல்.!

இந்நிலையில் ‘தங்கலான்’ படத்தின் இசை பணிகள் குறித்து செம்ம அப்டேட்டை கொடுத்துள்ளார் ஜி.வி. பிரகாஷ். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தங்கலான் படத்திற்காக தற்போது வரை இரண்டு பாடல்களை பதிவு செய்து முடித்துள்ளேன். இரண்டு பாடல்களும் நல்ல விதமாக வந்துள்ளது. அதில் சர்வதேச தரத்திலான ஆடியோவை இப்படத்தில் பயன்படுத்தியுள்ளேன். இதற்கு முன்னாள் இதை நான் முயற்சித்தது இல்லை.” என பதிவிட்டுள்ளார்.

Ajith Kumar: விஜயண்ணா தம்பியை தட்டித்தூக்கிய அஜித்: ‘ஏகே 63’ இயக்குனர் இவரா..!

அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பான் இந்தியா படமாக உருவாகவுள்ள ‘தங்கலான்’ கேஜிஎப் பற்றிய உண்மை வரலாறை கூறும் விதமாக உருவாக்கப்படவுள்ளதாக பா. ரஞ்சித் ஏற்கனவே பேட்டியில் தெரிவித்திருந்தார். மேலும் 3டியில் உருவாகவுள்ள இந்தப்படத்தில் பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.