சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து, 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக, ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்து உள்ளார். திருமகன் ஈவேரா மறைவைத்தொடர்ந்து, காலியான ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதன்படி, திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆனந்தும், அமமுக சார்பில் […]
