கேனரி தீவுகளுக்கு அருகே கால்நடைகளை ஏற்றிவந்த கப்பலை பரிசோதனை செய்த ஸ்பெயின் காவல்துறையினர் அடுக்கடுக்கான பெட்டிகளில் 4.5 டன் கோகைன் எனும் போதைப் பொருளைக் கைப்பற்றினர். இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ. 900 கோடி ($114 மில்லியன்) என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக இன்று வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொலம்பியாவிலிருந்து டோகோ கொடியிடப்பட்ட ஓரியன் V கப்பல் 10 க்கும் மேற்பட்ட நாடுகள் வழியாக பயணம் செய்து செவ்வாய்க்கிழமை அன்று கிரான் கனாரியா தீவில் உள்ள லாஸ் பால்மாஸில் […]
