திலீப் படத்தில் இணைந்த ஜீவா

மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரான திலீப் தற்போது பாந்தரா என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் முதன்முறையாக மலையாள திரையுலகில் அடி எடுத்து வைத்துள்ளார் நடிகை தமன்னா. ஏற்கனவே திலீப் நடிப்பில் ராம்லீலா என்கிற நூறு கோடி வசூல் படத்தை கொடுத்த இயக்குனர் அருண்கோபி தான் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் திலீப்பின் 148 ஆவது படத்திற்கான பூஜை கேரளாவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரபல இயக்குனர் ஜோஷி, நடிகர் மனோஜ் கே.ஜெயன் ஆகியோருடன் நடிகர் ஜீவாவும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை பிரணிதா சுபாஷும் கலந்து கொண்டனர்.

ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனம் தான் இந்தப்படத்தை தயாரிக்கிறது.. தங்கள் நிறுவனம் தயாரிக்கிறது என்பதால் ஜீவா கலந்து கொண்டாரா அல்லது அவரும் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்கிற விபரம் எதுவும் வெளியாகவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு மலையாளத்தில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்திய உடல் என்கிற படத்தை இயக்கிய ரதீஷ் ரகுநந்தன் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். கோட்டயம் பகுதியில் ஜன-28 (இன்று) முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.