பொங்கலுக்கு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற துணிவு படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
துணிவு படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, மஞ்சு வாரியர், ஜான் கொக்கேன், தர்ஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
வலிமை படத்தில் விட்டதை துணிவு படத்தில் பிடித்துள்ளார் இயக்குநர் வினோத். விஜயின் வாரிசு படத்துடன் களம் கண்டாலும் துணிவு அனைத்து வகை ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
இதனால் அஜித்தின் அடுத்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில், அதில் மாற்றம் இருக்கும் என்றே தெரிகிறது.
இந்நிலையில் துணிவு படத்தின் மேக்கிங் வீடியோவை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ளார். படத்தில் சண்டைக்காட்சிகளில் அஜித்துக்கு பதிலாக டூப் பயன்படுத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில் மேக்கிங் வீடியோவில் அஜித் சண்டையிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனையடுத்து அஜித் ரசிகர்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.
newstm.in