பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 36 மாணவர்களுக்கு வாந்தி, குமட்டல்

சாங்லி: மஹாராஷ்டிராவில் உள்ள சாங்லியில் மதிய உணவு சாப்பிட்ட 36 மாணவ, மாணவியர்கள் வாந்தி எடுத்ததால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி அடுத்த வான்லெஸ்வாடி உயர்நிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு சுயஉதவிக் குழுவினால் தயாரிக்கப்பட்ட மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த உணவை சாப்பிட்ட மாணவ, மாணவிகளில் 36 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

அதையடுத்து அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து கல்வி அதிகாரி கெய்க்வாட் கூறுகையில்:
மதிய உணவு சாப்பிட்ட பின்னர் 36 மாணவ, மாணவியருக்கு வயிற்று வலி மற்றும் குமட்டல் ஏற்பட்டுள்ளது. அவர்களில் பலர் வாந்தி எடுத்தனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைவரும் நலமாக உள்ளனர். பள்ளியின் சமையலறையில் இருந்து உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த விஷயம் குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மதிய உணவு திட்ட அதிகாரியிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.