ஆ.ராசாவின் நீலகிரி தொகுதியை குறி வைக்கும் பாஜக..!

நீலகிரி மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் குன்னூர் வெலிங்டன் தனியார் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பாஜகவின்சட்டமன்ற குழு தலைவரும் திருநெல்வேலி எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ஈரோடு கிழக்கு தேர்தல் பொறுத்தவரை அதிமுக இபிஎஸ், ஜி.கே. வாசனை சந்தித்து ஆதரவு கேட்டு விட்டார். 

ஈரோடு கிழக்கு தொகுதி பொருத்தவரை மாநில தலைவர் அண்ணாமலை என்ன முடிவு எடுக்கறாரோ அதை பொருத்துதான். நீலகிரி பாராளுமன்ற தொகுதியை பொருத்தமட்டும் ஏற்கனவே நாங்கள் ஒரு முறை வெற்றி பெற்றுள்ளோம். கூட்டணி கட்சிகள் இணைந்து போட்டியிடும்போது நிச்சயம் தாமரை சின்னத்தில் போட்டியிடுவோம். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி அபரீதமான வளர்ச்சியடைந்துள்ளது. அதை நாங்கள் சொல்வதை விட திமுக அமைச்சர் துரைமுருகனே கூறியிருக்கிறார்.

எங்களை பொருத்தவரை நாங்களும் ஒரு கனிசமான வளர்ச்சி பெற்றுள்ளோம் என்ற நம்பிக்கையுள்ளது. தமிழகத்தில் சட்டம ஒழுங்கை பொருத்தவரை கஞ்சா புழக்கம், போதைபொடிக்கள் ஒவ்வொரு மாவட்த்திலும் அதிகமாகியுள்ளது. தமிழக அரசு இதனை கட்டுப்படுத்த வேண்டும். டாஸ்மாக் முன்பு பள்ளி, மாணவர்கள் பெண்கள் அதிகமாக நிற்கின்றனர். இதனை பலமுறை சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளேன். டாஸ்மாக் நேரத்தை  குறைக்க வேண்டும்” என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.