சாகசம் செய்ய நினைத்து பெண்ணின் உயிரை பறித்த இளைஞர்! சம்பவ இடத்திலேயே அவரும் பலி


இந்திய மாநிலம் கேரளாவில் சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர், பெண்ணின் மீது மோதியதில் இருவரும் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பைக் ரேஸ்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் கோவளம் பைபாஸ் சாலையில் இளைஞர்கள் சிலர் பைக் ரேஸில் ஈடுபட்டனர்.

அப்போது சிந்து (53) என்ற பெண் அவ்வழியாக சாலையோரத்தில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அவர் பைபாஸ் சாலையை கடக்க முயற்சித்தபோது, இளைஞர் ஒருவர் அதிவேகமாக பைக்கை ஓட்டி வந்து மோதினார்.

இதில் குறித்த பெண் தூக்கி வீசப்பட்டார். படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சாகசம் செய்ய நினைத்து பெண்ணின் உயிரை பறித்த இளைஞர்! சம்பவ இடத்திலேயே அவரும் பலி | Youth Age Of 24 Hit Bike Woman Death Kerala

இளைஞரும் பலி

மேலும் பைக்கை ஓட்டிய இளைஞர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் மாலை வேளையில் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.     

சாகசம் செய்ய நினைத்து பெண்ணின் உயிரை பறித்த இளைஞர்! சம்பவ இடத்திலேயே அவரும் பலி | Youth Age Of 24 Hit Bike Woman Death KeralaSource link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.