தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி – இயக்குனர் வம்சி!

தமிழ்நாட்டில் பொங்கல் தினத்தன்று பிரபல நடிகர் விஜய் நடித்து வெளியான வாரிசு திரைப்படம் வெற்றி அடைந்ததையடுத்து திரைப்படத்தின் இயக்குனர் வம்சி பைடிபலி இன்று திருவண்ணாமலை நகரில் உள்ள அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர், அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் உள்ளிட்ட சன்னதியில் சாமி தரிசனம் செய்த அவர் தொடர்ந்து நவகிரக சன்னதியில் தீபமேற்றி தனது மனைவியுடனும், படக்குழுவினருடனும் சாமி தரிசனம் செய்தார்.  சாமி தரிசனம் முடித்து வந்த அவருக்கு திருக்கோவில் சார்பில் மாலை அணிவித்து கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது, அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

தமிழ்நாட்டு மக்களின் அன்பிற்கும் பாசத்திற்கும் தான் மிகுந்த கடமைப்பட்டுள்ளதாகவும், அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியவர், தமிழக மக்கள் தன் மீது அளவு கடந்த அன்பிற்காகவும் தன்னை தமிழ்நாட்டு மக்கள் இந்த இடத்தில் நிறுத்தியதற்கு நன்றி தெரிவித்தும் அண்ணாமலையாரின் ஆசியை பெறவே தான் தனது குடும்பத்தினருடனும், படக்குழுவினருடனும் அண்ணாமலையாரை தரிசித்ததாகவும் அவர் தெரிவித்தார். தமிழக மக்கள் தன்மீது அன்பைப் பொழிந்துள்ளதாகவும் அதற்கு நன்றியை தெரிவித்து வணங்கியதுடன் அனைவருக்கும் தான் மிகுந்த நன்றியை தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

படம் வெளியான 16 நாட்களில் இந்தியாவில் மட்டும் 193.94 கோடியும் வெளிநாடுகளில் 10.01 மில்லியன் டாலர்களும் உலகம் முழுவதும் மொத்தமாக 275.69 கோடியும் வசூலித்துள்ளதாக வர்த்தக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் வாரிசு படத்தின் வசூல் 300 கோடியை தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  விஜய் தற்போது லோகேஷ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.