இந்தியாவில் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக சில வட மாநிலங்களில் பாலியல் குற்றங்கள் சமீப காலங்களில் அதிகரித்து உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தலைநகர் டெல்லியில் 17 வயது சிறுவன் ஒருவன், பல பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை பெற்று அவர்களை மிரட்டி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த சிறுவன் இன்ஸ்டாகிராம் மூலம் பல பெண்களிடம் நட்பாக பழகியுள்ளான். பின் அவர்களை ஏமாற்றி, அந்தரங்க புகைப்படங்களை பெற்று மிரட்டியுள்ளார்.
ஒரு 14 வயது சிறுமி, சிறுவனுடன் பகிர்ந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகலாம் என்று பயந்த சிறுமி, அவரது தந்தையிடம் கூறி போலீசிடம் புகார் அளிக்கப்பட்டது.குற்றம் சாட்டப்பட்டவரின் அடையாளத்தை அறிய ஐபி முகவரிகள் மற்றும் மொபைல் எண்ணைக் கண்காணித்தனர். குற்றவாளியை அடையாளம் கண்டு அந்த சிறுவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.